/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பகுதிநேர ரேஷன் கடை அமைக்க ராமாபுரம் மக்கள் வேண்டுகோள்
/
பகுதிநேர ரேஷன் கடை அமைக்க ராமாபுரம் மக்கள் வேண்டுகோள்
பகுதிநேர ரேஷன் கடை அமைக்க ராமாபுரம் மக்கள் வேண்டுகோள்
பகுதிநேர ரேஷன் கடை அமைக்க ராமாபுரம் மக்கள் வேண்டுகோள்
ADDED : செப் 07, 2025 10:24 PM
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் நகராட்சிக்குட்பட்ட ராமாபுரத்தில், பகுதிநேர ரேஷன் கடை அமைக்க வேண்டும் என, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஸ்ரீபெரும்புதுார் நகராட்சி, 1வது வார்டுக்கு உட்பட்ட ராமாபுரம் பகுதியில், 50க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இப்பகுதி மக்கள் அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வாங்க, 5 கிலோ மீட்டர் துாரம் சென்று, ஸ்ரீபெரும்புதுார் ஏரிக்கரையோரம் உள்ள நியாய விலை கடைக்கு வர வேண்டிய நிலை உள்ளது.
இதனால், வெளியூர் வேலைக்கு செல்வோர் மற்றும் வயதானவர்கள் ரேஷன் கடைக்கு வந்து செல்ல பெரும் சிரமமாக உள்ளது.
எனவே, ராமாபுரம் பகுதியில், பகுதிநேர ரேஷன் கடை அமைக்க, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.