/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நத்தாநல்லுாரில் ரேஷன் கார்டு சிறப்பு முகாம்
/
நத்தாநல்லுாரில் ரேஷன் கார்டு சிறப்பு முகாம்
ADDED : நவ 11, 2024 02:56 AM
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், நத்தாநல்லுார் ஊராட்சியில், உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், குடும்ப அட்டைக்கான குறை தீர்க்கும் சிறப்பு முகாம் நடந்தது.
இம்முகாமில், குடும்ப அட்டைக்கான பெயர் சேர்த்தல், நீக்குதல், பெயர் திருத்தம், முகவரி மாற்றுதல் மற்றும் மொபைல் எண் இணைத்தல் போன்றவை குறித்தான குடும்ப அட்டைதாரர்களின் கோரிக்கை மனுக்களை, வாலாஜாபாத் வட்ட வழங்கல் அலுவலர் சுகுணா பெற்றுக் கொண்டார்.
பெறப்பட்ட மனுக்களில், தகுதி வாய்ந்த 24 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டன.
மீதமுள்ள மனுக்கள் மீது பரிசீலனை மேற்கொண்டு விரைவில் தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகாமில், அப்பகுதி வருவாய் ஆய்வாளர் விஸ்வநாதன், கிராம நிர்வாக அலுவலர் சசிகலா, வட்ட வழங்கல் இளநிலை உதவியாளர் சுந்தர் உட்பட பலர் பங்கேற்றனர்.