/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் ரேஷன் அரிசி பறிமுதல்
/
காஞ்சியில் ரேஷன் அரிசி பறிமுதல்
ADDED : செப் 03, 2025 01:49 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில், வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 1,200 கிலோ ரேஷன் அரிசியை, குடிமை பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டை பகுதியில் உள்ள வீடு ஒன்றில், ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக, குடிமை பொருள் வழங்கல் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மாவட்ட வழங்கல் அலுவலர் பாலாஜி தலைமையிலான குடிமை பொருள் வழங்கல் துறை அதிகாரிகள், அப்பகுதியில் ஆய்வு நடத்தினர். அப்பகுதியில் உள்ள சி.வி.எம்., ஜந்தா தெருவில் உள்ள வீடு ஒன்றில், 1,200 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.
அங்கிருந்த ரேஷன் அரிசியை கைப்பற்றிய அதிகாரிகள், நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.