நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி 7வது வார்டு, வைகுண்ட பெருமாள் மாட வீதியில், ரேஷன் கடைக்கு சொந்த கட்டடம் கட்ட வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன், 2024 - 25ம் நிதியாண்டு, சட்டசபை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 18.50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தார்.
இதில், புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடை திறப்பு விழா நேற்று நடந்தது. இதில், எம்.எல்.ஏ., எழிலரசன் புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.