/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ராவதநல்லுார் கோவில் கும்பாபிஷேகம்
/
ராவதநல்லுார் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : மார் 05, 2024 11:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம்,ராவதநல்லுாரில்சுயம்புஸ்ரி சக்கரத்தாழ்வார் விஜயவல்லி சமேத சக்ரராஜ சுவாமி கோவில் உள்ளது.
இக்கோவிலில், 12 ஆண்டுகளுக்குப் பின் சீரமைப்பு பணி மேற்கொண்டு நேற்று முன்தினம் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
விழாவையொட்டி, கடந்த 3ம் தேதி, யாகசாலை பிரவேசம், த்வாரபூஜை, பகவத் ஆராதனம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன.
நேற்று முன்தினம் சாந்தி ஹோமம், யாக வேள்வி பூஜைகளை தொடர்ந்து கலச புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. அதைத் தொடர்ந்து கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

