/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நபார்டு திட்டத்தில் ரூ.33.38 கோடி 19 பணிகளுக்கு அனுமதி கேட்டு அரசிற்கு பரிந்துரை
/
நபார்டு திட்டத்தில் ரூ.33.38 கோடி 19 பணிகளுக்கு அனுமதி கேட்டு அரசிற்கு பரிந்துரை
நபார்டு திட்டத்தில் ரூ.33.38 கோடி 19 பணிகளுக்கு அனுமதி கேட்டு அரசிற்கு பரிந்துரை
நபார்டு திட்டத்தில் ரூ.33.38 கோடி 19 பணிகளுக்கு அனுமதி கேட்டு அரசிற்கு பரிந்துரை
ADDED : ஏப் 16, 2025 09:41 PM
காஞ்சிபுரம்:நபார்டு திட்டத்தில், 19 பணிகளுக்கு, 33.38 கோடி ரூபாய் நிதி கேட்டு, அரசிற்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இரு மாவட்டங்களிலும், தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, மாவட்ட சாலை, இதர சாலை என, மொத்தம், 2,253 கி.மீ., துார சாலைகள் உள்ளன.
இதுதவிர, 1,292 கி.மீ., ஒன்றிய சாலைகள், 1,694 கி.மீ., துாரம் ஊராட்சி சாலைகள் என, மொத்தம் 5,239 கி.மீ., துார சாலை வகைபாடுகள் உள்ளன.
கடந்த, 2021ம் ஆண்டு, காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய உதவிக்கோட்டங்கள் உள்ளடக்கிய நெடுஞ்சாலைத் துறை கோட்ட அலுவலகம், காஞ்சிபுரம் கலெக்ரேட் பின்புற பகுதியில் இயங்கி வருகிறது.
இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில், 1,122 கி.மீ., துார சாலைகள் மற்றும் ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் 130 கி.மீ., துார சாலைகள் உள்ளன.
இந்த சாலைகளை மாநில அரசு மற்றும் மத்திய அரசின் நிதியை பயன்படுத்தி சாலைகள் போடப்படுகின்றன. இதுதவிர, நபார்டு திட்டம், பிரதமர் சாலைகள் மேம்பாடு ஆகிய திட்டங்களின் வாயிலாகவும் சாலைகள் போடப்படுகின்றன.
கடந்த, 2024 - -25ம் நிதி ஆண்டில், 19 கி.மீ., துாரம், 11.52 கோடி ரூபாய் செலவில், பத்து சாலைகள் போடும் பணி நடந்து வருகின்றன. நடப்பு, 2025 - -26ம் நிதி ஆண்டிற்கு, 28 கி.மீ., துாரத்தில், 15 சாலைகள் போடுவதற்கும், நான்கு இடங்களில் பாலம் கட்டுவதற்கு என, மொத்தம் 19 பணிகளுக்கு, 33.38 கோடி ரூபாய் கேட்டு அரசிற்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நபார்டு திட்டத்தில் சாலைகள் மற்றும் தரைப்பாலம் போடும் பணி செய்து வருகிறோம். கடந்த நிதி ஆண்டு, பத்து பணிகள் தேர்வு செய்து, சாலை போடும் பணி நடந்து வருகிறது.
அடுத்த நிதி ஆண்டிற்கு, 33.38 கோடி ரூபாய் நிதி கேட்டு அரசிற்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. ஒப்புதல் கிடைத்த பின் பணிகள் துவக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.