/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கிணற்றில் மூதாட்டியின் உடல் மீட்பு
/
கிணற்றில் மூதாட்டியின் உடல் மீட்பு
ADDED : டிச 19, 2024 08:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:பெருநகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இராவத்தநல்லூர் ஊராட்சி, ஆரோக்கியபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவரின் மனைவி சிசிலியா, 73. இவர், நீண்ட நாட்களாக குடும்ப பிரச்னையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று அதிகாலை முதல் மூதாட்டி வீட்டில் இல்லாததால், உறவினர்கள் பல இடங்களில் தேடினர். பின், வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில், மூதாட்டியின் உடல் மீட்கப்பட்டது. பெருநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.