/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நுாறு நாள் பணியாளர்களின் எண்ணிக்கை குறைப்பு அரசு வீடு கட்டுவோருக்கு முக்கியத்துவம் அளிப்பு
/
நுாறு நாள் பணியாளர்களின் எண்ணிக்கை குறைப்பு அரசு வீடு கட்டுவோருக்கு முக்கியத்துவம் அளிப்பு
நுாறு நாள் பணியாளர்களின் எண்ணிக்கை குறைப்பு அரசு வீடு கட்டுவோருக்கு முக்கியத்துவம் அளிப்பு
நுாறு நாள் பணியாளர்களின் எண்ணிக்கை குறைப்பு அரசு வீடு கட்டுவோருக்கு முக்கியத்துவம் அளிப்பு
ADDED : ஜூன் 18, 2025 08:25 PM
காஞ்சிபுரம்:நுாறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில், தினசரி பணிபுரியும் பணியாளர்களின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. அரசு திட்டத்தில் வீடு கட்டுவோருக்கு முக்கியத்துவம் அளிக்க ஊரக வளர்ச்சி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், மத்திய அரசு மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் செயல்படுத்தி வருகிறது. இதில், 1.37 லட்சம் குடும்பங்களில், 1.68 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இதில், 1.29 லட்சம் பேருக்கு, 100 நாள் வேலை வழங்கப்படுகிறது.
ஒரு வாரத்திற்கு, ஆறு நாட்கள் என, சுழற்சி முறையில், 100 நாள் பணியாளர்களுக்கு வேலை வழங்கப்படுகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரையில், 40,918 பேர்களுக்கு, 100 நாள் வேலை வழங்கப்படுகிறது.
நடப்பு, 2025- - 26ம் நிதி ஆண்டிற்குரிய லேபர் பட்ஜெட் என, அழைக்கப்படும் பணி பட்டியல் தேர்வு செய்யவில்லை. ஊராட்சி நிர்வாகங்கள் தேர்வு செய்த பணிகளுக்கு, மாற்று பணிகள் தேர்வு செய்து பட்டியல் வழங்கும் படி அந்தந்த பணி மேற்பார்வையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் தேர்வு செய்யும் பணிகளில் பணி மேற்பார்வையாளர்கள், ஊராட்சி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், 511 கிளஸ்டர்கள் என அழைக்கப்படும் குழுவில் இருக்கும் நபர்களுக்கு வழங்க வேண்டிய 100 நாள் வேலை முழுமையாக கிடைக்கவில்லை என, பணியாளர்கள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உதாரணமாக, ஒரு கிளஸ்டரில், 100 நபர்கள் இருந்தால், அதில் பாதிக்கும் குறைவான நபர்களுக்கு மட்டுமே வேலை வழங்க வேண்டும் என, வாய் வழி உத்தரவிடப்பட்டள்ளது. அதன்படி மாவட்டம் முழுதும், 40,000 நபர்களுக்கு வழங்க வேண்டிய வேலையை, 10,000 நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. எஞ்சி இருக்கும் நபர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என, பும்பல் எழுந்துள்ளது.
இதுகுறித்து, வாலாஜாபாத் வட்டாரத்தைச் சேர்ந்த நுாறு நாள் பணியாளர்கள் கூறியதாவது:
ஒரே கிளஸ்டரில் இருக்கும் நபர்களுக்கு, பாதி பேரின் பெயர்கள் பணி பட்டியலில் வந்துள்ளது. மீதி பேரின் பெயர்கள் பணி பட்டியலில் இடம் பெறவில்லை. கேட்டால், பெயர் வந்தவர்கள் மட்டும் வேலை செய்யலாம். பெயர் வராதவர்களுக்கு வேலை இல்லை என்கின்றனர்.
எனவே, அனைவருக்கும் வேலை கிடைக்க வழி வகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினர்.
இதுகுறித்து, ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கனவு இல்ல திட்ட பணியாளர்களுக்கு 90 நாள் ஒதுக்கீடு செய்து கொடுக்க வேண்டும் என, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, 2 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.
இதற்கு, நாற்றாங்கல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும், ஒரு நபருக்கு முழு கூலி கிடைக்கும் விதமாக குறைந்த எண்ணிக்கை பணியாளர்களை வரவழைத்து, அதன் வாயிலாக அளவீடு செய்து பணி ஒதுக்கப்பட உள்ளது.
இதை சோதனைக்கு கணக்கீடு செய்யபடுகிறது. விரைவில் அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.