/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செவிலிமேடு - கீழம்பி புறவழிச்சாலை நெடுஞ்சாலைத் துறை சீரமைப்பு
/
செவிலிமேடு - கீழம்பி புறவழிச்சாலை நெடுஞ்சாலைத் துறை சீரமைப்பு
செவிலிமேடு - கீழம்பி புறவழிச்சாலை நெடுஞ்சாலைத் துறை சீரமைப்பு
செவிலிமேடு - கீழம்பி புறவழிச்சாலை நெடுஞ்சாலைத் துறை சீரமைப்பு
ADDED : மே 26, 2024 12:34 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாறு பாலத்தில் இருந்து கீழம்பி செல்லும் புறவழிச்சாலை 8 கி.மீ., நீளம் உள்ளது. உத்திரமேரூர், வந்தவாசி பகுதியில் இருந்து வேலுார், பெங்களூரு, அரக்கோணம், சென்னை செல்லும் கனரக வாகனங்கள் காஞ்சிபுரம் நகருக்குள் செல்லாமல் புறவழி சாலை வழியாக சென்று வருகின்றன.
இச்சாலையில், அதிக பாரம் ஏற்றிச் சென்ற கனரக வாகனங்களாலும், மழையின் காரணமாகவும், பல இடங்களில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியதோடு, புழுதி பறக்கும் சாலையாக இருந்து வருகிறது.
இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வந்தனர். சேதமடைந்த இச்சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், மாநில நெடுஞ்சாலைத் துறை, காஞ்சிபுரம் கோட்டம் சார்பில், இச்சாலை சீரமைக்கப்பட்டு வருகிறது
இதுகுறித்து, காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளர் விஜய் கூறியதாவது:
செவிலிமேடு பாலாறு பாலம் அருகில் இருந்து, அதிகளவு சேதமடைந்த 600 மீட்டர் நீளத்திற்கு புதிதாக சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. மீதமுள்ள இடங்களில் பேட்ச் ஒர்க் பணியாக சாலை சீரமைக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.