/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தொழிற்சாலை ஊழியர் தற்கொலை உறவினர்கள் மறியல்; 2 பேர் கைது
/
தொழிற்சாலை ஊழியர் தற்கொலை உறவினர்கள் மறியல்; 2 பேர் கைது
தொழிற்சாலை ஊழியர் தற்கொலை உறவினர்கள் மறியல்; 2 பேர் கைது
தொழிற்சாலை ஊழியர் தற்கொலை உறவினர்கள் மறியல்; 2 பேர் கைது
ADDED : ஜூலை 19, 2025 12:30 AM

ஸ்ரீபெரும்புதுார்:பணிச்சுமை காரணமாக, தற்கொலை செய்து கொண்ட தனியார் தொழிற்சாலை ஊழியரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த மதுராபேட்டையை சேர்ந்தவர் ரஞ்சித், 22. ஸ்ரீபெரும்புதுார் பட்டுநுால் சத்திரம் பகுதியில் வாடகைக்கு தங்கி, மாம்பாக்கத்தில் உள்ள கண்ணாடி உற்பத்தி தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் காலை 6:30 மணிக்கு, உடன் தங்கியிருந்தவர்கள் ரஞ்சித்தின் அறையை திறந்து பார்த்த போது, அவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
இது குறித்து, ஸ்ரீபெரும்புதுார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தினர்.
விசாரனையில், ரஞ்சித் தற்கொலை செய்வதற்கு முன் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது.
அதில், 'தன் தற்கொலைக்கு காரணம், தான் வேலை செய்யும் தொழிற்சாலை உரிமையாளர் அய்யப்பன் மற்றும் சூப்பர்வைசர் மாரியப்பன் காரணம்.
உணவு இடைவெளிகூட வழங்காமல், தொடர்ந்து அதிக பணிசுமை தந்து தன்னை துன்புறுத்தியதாகவும். கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும்' எழுதியிருந்தது.
இந்நிலையில் நேற்று காலை ரஞ்சித்தின் உறவினர்கள் 30க்கும் மேற்பட்டோர், அய்யப்பன் மற்றும் மாரியப்பன் இருவரையும் கைது செய்ய கோரி, ஸ்ரீபெரும்புதுார் போலீஸ் நிலையம் எதிரே, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார் அவர்களிடம் பேசினர். இவரும் கைது செய்யப்படுவர் என, உறுதி அளித்ததின் அடிப்படையில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து அய்யப்பன் மற்றும் மாரியப்பன் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.