/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பெண் கொலை உறவினர்கள் சாலை மறியல்
/
பெண் கொலை உறவினர்கள் சாலை மறியல்
ADDED : ஜூலை 07, 2025 12:47 AM
காஞ்சிபுரம்:பெண்ணை அடித்து கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உறவினர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் அடுத்த, ஆண்டி சிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த ஹெப்சிபா மேரி, 41; அட்டை பெட்டி தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு தலை உள்ளிட்ட இடங்களில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். தகவலறிந்த, பொன்னேரிக்கரை போலீசார், ஹெப்சிபா மேரி உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலைக்கு காரணமானவர்கள் மீது, இறந்த பெண்ணின் உறவினர்கள் நேற்று, பகல் 1:30 மணிக்கு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த, விஷ்ணு காஞ்சி போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, பகல் 2:10 மணிக்கு உறவினர்கள் கலைந்து சென்றனர்.
இருப்பினும், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு முன் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.