/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மின் கம்பத்தில் கட்டப்பட்டுள்ள விளம்பர தட்டிகள் அகற்றம்
/
மின் கம்பத்தில் கட்டப்பட்டுள்ள விளம்பர தட்டிகள் அகற்றம்
மின் கம்பத்தில் கட்டப்பட்டுள்ள விளம்பர தட்டிகள் அகற்றம்
மின் கம்பத்தில் கட்டப்பட்டுள்ள விளம்பர தட்டிகள் அகற்றம்
ADDED : ஜூன் 29, 2025 12:24 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூரில் துாய்மைப்படுத்தும் நிகழ்வாக, மின்கம்பங்களில் ஒட்டப்பட்டு இருந்த விளம்பர தட்டிகள் அகற்றப்பட்டன.
உத்திரமேரூர் பேரூராட்சியில் உள்ள பொது இடங்களை துாய்மைப்படுத்தும் நிகழ்வு நேற்று நடந்தது. உத்திரமேரூர் பேரூராட்சியில், வந்தவாசி சாலை, காஞ்சிபுரம் சாலை, எல்.எண்டத்துார் சாலை, புக்கத்துறை சாலை ஆகிய பிரதான சாலைகள் உள்ளன.
இந்த சாலைகளில் பயணியர் நிழற்குடை, மின் கம்பங்கள், பல்வேறு அரசு அலுவலக கட்டடங்கள் உள்ளன. இங்குள்ள சுவர்களில் அரசியல் கட்சி, பள்ளி, துணிக்கடைகள், ரியல் எஸ்டேட் ஆகியவற்றின் விளம்பர போஸ்டர் ஒட்டப்பட்டு, மின் கம்பங்களில் விளம்பர தட்டிகளும் கட்டப்பட்டு வருகின்றன.
இதைத்தடுக்க, துாய்மை நகருக்கான மக்கள் இயக்கம் சார்பில், பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் மற்றும் மின் கம்பங்களில் கட்டப்பட்டுள்ள விளம்பர தட்டிகள் நேற்று அகற்றப்பட்டன.