/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆக்கிரமிப்பு வீடுகள் பரணிபுத்துாரில் அகற்றம்
/
ஆக்கிரமிப்பு வீடுகள் பரணிபுத்துாரில் அகற்றம்
ADDED : மே 16, 2025 09:05 PM
மாங்காடு:குன்றத்துார் அருகே மாங்காடு அடுத்த பரணிபுத்துார் ஊராட்சி சீனிவாசபுரத்தில், அரசுக்கு சொந்தமான, 17 சென்ட் நிலத்தில், ஐந்து வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தன.
இந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, குடிநீர் மேல்நிலைத்தொட்டி அமைக்க, அரசு சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, வருவாய் துறையினர் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர். இந்நிலையில், நேற்று அங்கு வந்த வருவாய் துறையினர், நான்கு ஆக்கிரமிப்பு வீடுகளை, பொக்லைன் இயந்திரம் வாயிலாக இடித்து அகற்றினர்.
ஒரு வீட்டில் உரிமையாளர்கள் யாரும் இல்லாததால், அந்த வீட்டை இடிக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்நிலையில், போதிய கால அவகாசம் வழங்காமல், பொருட்களை வெளியே எடுத்து வீசி, வீடுகளை இடித்து அகற்றியதாக, அதிகாரிகள் மீது ஆக்கிரமிப்பாளர்கள் குற்றம்சாட்டினர்.