ADDED : ஜூலை 27, 2025 12:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் ஆக்கரமித்து கட்டியிருந்த இரண்டு கடைகள் இடித்து அகற்றப்பட்டன.
காஞ்சிபுரம் நகரின் மையத்தில், ராஜாஜி மார்க்கெட் 7 கோடி ரூபாய் மதிப்பில் புதியதாக கட்டி சில மாதங்கள் முன் திறக்கப்பட்டது.
இந்த மார்க்கெட் சுற்றிலும் ஏராளமான கடைகள் சாலையிலேயே செயல்படுகின்றன. சிலர், மாநகராட்சி இடத்தை முழுமையாக ஆக்கிரமித்து, கடை கட்டியுள்ளனர்.
அவ்வாறு, மார்க்கெட் அருகே, 2,000 சதுரடி பரப்பளவு கொண்ட இரு கடைகள் ஆக்கிரமிப்பு செய்திருந்தன. இதுபற்றி மாநகராட்சிக்கு வந்த புகாரை தொடர்ந்து, மார்க்கெட் அருகே கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு கடைகளை, பொக்லைன் இயந்திரம் மூலம், மாநகராட்சி ஊழியர்கள் இடித்து அகற்றினர்.