/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உயர் மின்வழித்தடம் அமைக்க இடையூறு மரங்கள் அகற்றம்
/
உயர் மின்வழித்தடம் அமைக்க இடையூறு மரங்கள் அகற்றம்
ADDED : அக் 11, 2024 11:54 PM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே ஒரகடம் சிப்காட் தொழில் பூங்காவில், 180க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இங்குள்ள சிப்காட் சாலையோரங்களில், இயற்கை சூழலை அதிகரிக்கும் வகையில், நிழல் மற்றும் காற்றில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி, சுத்தமான காற்று தரும் மர வகைகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
அதேபோல், ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள்கோவில் சாலையில் இருந்து மேட்டுப்பாளையம் சிப்காட் சாலையில், தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன், 200க்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டு, பாதுகாப்பு வேலி அமைத்து பராமரிக்கப்பட்டு வந்தன.
தற்போது இந்த மரங்கள் நன்கு வளர்ந்துள்ள நிலையில், அவ்வழியாக செல்லும் உயர் மின்னழுத்த வழித்தடத்திற்கு, இந்த மரங்கள் இடையூறாக உள்ளதாக, இரு நாட்களாக மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.
சிப்காட் சாலையோரங்களில் நிழல் தரும் 50க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டுள்ளது, சமூக ஆர்வலர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.