/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அவளூர் சிங்கேஸ்வரர் கோவில் புனரமைப்பு பணி துவக்கம்
/
அவளூர் சிங்கேஸ்வரர் கோவில் புனரமைப்பு பணி துவக்கம்
அவளூர் சிங்கேஸ்வரர் கோவில் புனரமைப்பு பணி துவக்கம்
அவளூர் சிங்கேஸ்வரர் கோவில் புனரமைப்பு பணி துவக்கம்
ADDED : ஜூலை 10, 2025 12:52 AM

வாலாஜாபாத்:அவளூர் சிங்கேஸ்வரர் கோவிலில் புனரமைப்பு பணி துவங்கப்பட்டு உள்ளது.
வாலாஜாபாத் அடுத்து பாலாற்றங்கரையொட்டி அவளூர் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான காமாட்சி அம்மன் உடனுறை சமேத சிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.
கோவிலில் காலை, மாலை நேரங்களில் பூஜைகள் மற்றும் மாதந்தோறும் சனி பிரேதாஷம், அன்னதானம் போன்றவை அப்பகுதிவாசிகள் சார்பில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இக்கோவிலின் கட்டட பகுதி மற்றும் கோபுரத்தை சுற்றி உள்ள சுவாமி உருவம் சிதிலம் அடைந்து, கான்கிரீட் பெயர்ந்து உதிர்ந்து காணப்படுகிறது.
எனவே, இக்கோவிலை ஹிந்து சமய அறநிலையத் துறை அனுமதியின்படி, புனரமைக்க அப்பகுதி மக்கள் தீர்மானித்தனர்.
அதன்படி, சில தினங்களுக்கு முன் இக்கோவிலில் பாலாலயம் நிகழ்ச்சி நடைபெற்று தற்போது புனரமைப்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
பணி முடிவுற்ற பின், மஹா கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் மற்றும் கிராமத்தினர் தீர்மானித்துள்ளனர்.