/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
அனுமந்தண்டலத்தில் உடைந்த குழாய் சீரமைப்பு
/
அனுமந்தண்டலத்தில் உடைந்த குழாய் சீரமைப்பு
PUBLISHED ON : நவ 23, 2025 01:59 AM

உத்திரமேரூர்: நம் நாளிதழில் வெளியான செய்தியையடுத்து, அனுமந்தண்டலத்தில், உடைந்த குழாயை ஊராட்சி நிர்வாகத்தினர் சீரமைத்தனர்.
உத்திரமேரூர் தாலுகா, அனுமந்தண்டலம் செய்யாற்றில் ஆழ்த்துளை கிணறு அமைத்து, குழாய்கள் வாயிலாக சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த குழாய்கள் களியாம்பூண்டி, சிலாம்பாக்கம் செல்லும் சாலையோரங்களில் பூமிக்கடியில் புதைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அனுமந்தண்டலத்தில் களியாம்பூண்டி சாலையோரத்தில் பூமிக்கடியில் புதைக்கப்பட்ட குழாய், உடைப்பு ஏற்பட்டு நீண்ட நாட்களாக குடிநீர் வீணாகி வந்தது.
இது குறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, ஊராட்சி நிர்வாகத்தினர், உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்கும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.

