/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
கீழ்கதிர்பூரில் உடைந்த குடிநீர் குழாய் சீரமைப்பு
/
கீழ்கதிர்பூரில் உடைந்த குடிநீர் குழாய் சீரமைப்பு
PUBLISHED ON : நவ 09, 2025 12:00 AM

கீழ்கதிர்பூர்: திருப்பாற்கடல் பாலாறில் இருந்து காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு நிலத்தடி வழியாக செல்லும் குழாயில், கீழ்கதிர்பூர் பிரதான சாலையில், மூன்று இடங்களில் ஏற்பட்டிருந்த உடைப்பை காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகத்தினர் நேற்று சீரமைத்தனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் வசிப்பவர்களுக்கு காஞ்சிபுரம் பாலாறு, வேலுார் மாவட்டம், திருப்பாற்கடல் பாலாறு மற்றும் வேகவதி ஆற்றங்கரையில் ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்டு, நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாய் வாயிலாக, மாநகராட்சி சார்பில், குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருப்பாற்கடலில் இருந்து காஞ்சிபுரத்திற்கு நிலத்தடி வழியாக செல்லும் குழாயில், கீழ்கதிர்பூர் பிரதான சாலையில் மூன்று இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், ஆற்று நீரைபோல குடிநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.
இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் நேற்று படத்துடன் வெளியானதையடுத்து, கீழ்கதிர்பூரில் குடிநீர் பிரதான குழாயில் மூன்று இடங்களிலும் ஏற்பட்ட உடைப்பை மாநகராட்சி நிர்வாகத்தினர் நேற்று சீரமைத்தனர்.

