/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செவிலிமேடு பாலத்தில் சேதமடைந்த சாலை சீரமைப்பு
/
செவிலிமேடு பாலத்தில் சேதமடைந்த சாலை சீரமைப்பு
ADDED : டிச 08, 2024 02:00 AM

காஞ்சிபுரம்:வங்க கடலில் உருவாகன ‛பெஞ்சல்' புயல் காரணமாக, காஞ்சிபுரத்தில் கடந்த வாரம் பலத்த மழை பெய்தது. இதில், காஞ்சிபுரம் வந்தவாசி சாலை, செவிலிமேடு -புஞ்சையரசந்தாங்கல் இடையே, பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தின் சாலையில், ஆங்காங்கே சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டது.
தெரு மின்விளக்கு வசதி இல்லாத இப்பாலத்தில், இரவு நேரத்தில் சென்ற வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்கினர். இதையடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.
காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத்துறை சார்பில், செவிலிமேடு பாலாறு மேம்பாலத்தில் சேதமடைந்த சாலையை ‛பேட்ச் ஒர்க்' பணியாக நேற்று சீரமைத்தனர்.