/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வெள்ளைகேட் சர்வீஸ் சாலையில் மழைநீர் வடிகால்வாய் சீரமைப்பு
/
வெள்ளைகேட் சர்வீஸ் சாலையில் மழைநீர் வடிகால்வாய் சீரமைப்பு
வெள்ளைகேட் சர்வீஸ் சாலையில் மழைநீர் வடிகால்வாய் சீரமைப்பு
வெள்ளைகேட் சர்வீஸ் சாலையில் மழைநீர் வடிகால்வாய் சீரமைப்பு
ADDED : அக் 13, 2024 12:48 AM

காஞ்சிபுரம்:சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், வெள்ளைகேட் சர்வீஸ் சாலை உள்ளது. இந்த சாலையோரம், பொன்னேரிக்கரையில் இருந்து அரக்கோணம் செல்லும் வாகனங்கள் மற்றும் அரக்கோணத்தில் இருந்து, வெள்ளைகேட் மேம்பாலம் வழியாக, வேலுாருக்கு செல்லும் வாகனங்கள் செல்கின்றன.
இதுதவிர, திருப்பதி நகர் வழியாக, கரியன் கேட்டிற்கு செல்லும் வாகனங்கள் மற்றும் காஞ்சிபுரத்தில் இருந்து, திருப்பதி நகர், வெள்ளைகேட் மேம்பாலம் வழியாக வேலுாருக்கு வாகனங்கள் செல்கின்றன.
வெள்ளைகேட் சர்வீஸ் சாலையோரம், மழைநீர் கால்வாய் சேதம் ஏற்பட்டது. அதை சீரமைக்க சிமென்ட் சிலாப் இடித்து அகற்றப்பட்டது. அதன் கட்டுமான பணிகள் நிறைவு செய்யாமல் ஆறு மாதங்களாக கிடப்பில் போடப்பட்டு இருந்தது.
சமீபத்தில், சேதமடைந்த மழைநீர் கால்வாய் மீது, சிமென்ட் கான்கிரீட் கலவை போடப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, வெள்ளைகேட் பகுதியில் வாகன விபத்து தவிர்க்கப்படும் என, தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.