/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தடுப்பு இல்லா தரைப்பாலம் சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
/
தடுப்பு இல்லா தரைப்பாலம் சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
தடுப்பு இல்லா தரைப்பாலம் சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
தடுப்பு இல்லா தரைப்பாலம் சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
ADDED : ஜன 19, 2025 02:57 AM

காஞ்சிபுரம்,
மதுரமங்கலம் அடுத்த கண்ணன்தாங்கல் கிராமத்தில் இருந்து, குணகரம்பாக்கம் கிராமம் வழியாக, எடையார்பாக்கம் கிராமத்திற்கு சாலை செல்கிறது.
இந்த சாலை வழியாக, சுங்குவார்சத்திரம் பகுதியில் இருந்து, குணகரம்பாக்கம் வழியாக, செல்லம்பட்டிடை, எடையார்பாக்கம், கோட்டூர், கப்பான்கோட்டூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் இச்சாலை வழியாக சென்று வருகின்றனர்.
இதில், குணகரம் பாக்கம் - எடையார்பாக்கம் ஆகிய இரு கிராமங்கள் இடையே தரைப்பாலம்செல்கிறது.
இந்த தரைப்பாலத்தின்யோரம், சிறிய தடுப்புகள் ஆங்காங்கே உடைந்து சேதமடைந்துள்ளன.இதனால், இச்சாலை வழியாக செல்லும் வாகனங்கள், தரைப்பாலத்தின் ஓரத்தில் தடுப்பு இன்றி கவிழும் அபாயம் உள்ளது.
எனவே, குணகரம்பாக்கம் - எடையார்பாக்கம் இடையே செல்லும் தரைப்பாலத்தின் ஓரம் தடுப்புச்சுவர் அமைக்கநடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.