/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாட வீதியில் வாகனங்களை நிறுத்த தடை விதிக்க கோரிக்கை
/
மாட வீதியில் வாகனங்களை நிறுத்த தடை விதிக்க கோரிக்கை
மாட வீதியில் வாகனங்களை நிறுத்த தடை விதிக்க கோரிக்கை
மாட வீதியில் வாகனங்களை நிறுத்த தடை விதிக்க கோரிக்கை
ADDED : செப் 04, 2025 03:07 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் தெற்கு மாட வீதி மதில் சுவரையொட்டி, வாகனங்களை நிறுத்த போலீசார் தடை விதிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் தங்களது வாகனங்களை தெற்கு மாட வீதியில், கோவில் மதில் சுவரையொட்டி நிறுத்தப்படுகிறது.
இதனால், அவ்வழியாக வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும், அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
எனவே, வரதராஜ பெருமாள் கோவில் தெற்கு மாட வீதியில், போக்குவரத்துக்கு இடையூறாக கோவில் மதில் சுவரையொட்டி நிறுத்தப்படும் வாகனங்களை அகற்றவும், அப்பகுதியில் வாகனங்களை நிறுத்தவும் போலீசார் தடை விதிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.