/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மக்ளின் கால்வாய் குறுக்கே தடுப்பணை அமைக்க கோரிக்கை
/
மக்ளின் கால்வாய் குறுக்கே தடுப்பணை அமைக்க கோரிக்கை
மக்ளின் கால்வாய் குறுக்கே தடுப்பணை அமைக்க கோரிக்கை
மக்ளின் கால்வாய் குறுக்கே தடுப்பணை அமைக்க கோரிக்கை
ADDED : ஜூலை 21, 2025 01:55 AM

காஞ்சிபுரம்,:மக்ளின் கால்வாய் குறுக்கே தடுப்பணை அமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், தைப்பாக்கம் கிராமத்தில் இருந்து, கம்பன் கால்வாய் மற்றும் கோவிந்தவாடி கிராம மக்ளின் கால்வாய் என, இரு கால்வாய்களாக இரண்டாக பிரிகின்றன.
இக்கால்வாய், 15 கி.மீ., நீளமும், 30 மீட்டர் அகலம் உடைய ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வெட்டப்பட்ட கால்வாயாகும். இதை, நீர்வள ஆதாரத் துறையினர் பராமரித்து வருகின்றனர்.
தைப்பாக்கம் கிராமத்தில் இருந்து, வதியூர், கீழ்வெம்பாக்கம், மேல் வெம்பாக்கம் ஆகிய கிராமங்களின் வழியாக செல்லும் மக்ளின் கால்வாய் திருமால்பூர் கிராமத்தில் இரண்டாக பிரிந்து, ஒரு கால்வாய் கோவிந்தவாடி ஏரி நீர் வரத்து கால்வாயாகவும். மற்றொரு கால்வாய் விருதசீர நதியாக உருப் பெற்றுள்ளது.
கோவிந்தவாடி ஏரி நிரம்பினால், விருதசீர நதிக்கு தண்ணீர் திருப்பி விடுவது வழக்கமாக உள்ளது.
இது போன்ற தண்ணீர் திருப்பும் பகுதியில் கால்வாய் நடுவே தடுப்பணை இல்லை. அதற்கு பதிலாக, நீர்வள ஆதாரத் துறையினர் மண் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர்.
இது வெள்ளப்பெருக்கு காலங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீரை மடை மாற்றி விட முடியாத நிலை உள்ளது.
எனவே, கோவிந்தவாடி ஏரிக்கு செல்லும் தண்ணீரை மடை மாற்றி விடுவதற்கு திருமால்பூர் அருகே தடுப்பணை கட்டிக் கொடுத்து, பலகைகள் அமைக்க வேண்டும் என, விவசாயிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட நீர்வள ஆதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஆய்வு செய்துவிட்டு தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

