/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மதுக்கூடமான அங்கன்வாடி மையம் சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
/
மதுக்கூடமான அங்கன்வாடி மையம் சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
மதுக்கூடமான அங்கன்வாடி மையம் சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
மதுக்கூடமான அங்கன்வாடி மையம் சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
ADDED : ஜன 19, 2025 12:57 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில் உள்ள கந்தன் பூங்கா வளாகத்தில், கடந்த 2003ல் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில், 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
அங்கன்வாடி மையத்திற்கு என, சுற்றுச்சுவர் இல்லாததால், பாழடைந்து கிடக்கும் பூங்காவிற்குள், இரவு நேரத்தில் மது அருந்த வரும் சமூக விரோதிகள், அங்கன்வாடி மையத்தின் வெளியே உள்ள சிமென்ட் தரை பகுதியை மது அருந்தும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும், அந்த இடத்தில் காலி மதுபாட்டில்களை உடைத்துவிட்டு செல்கின்றனர். இதனால், அங்கன்வாடி மைய ஊழியர்கள் தினமும் காலை பணிக்கு வந்ததும், மதுபாட்டில்களை அகற்றுவது, 'குடி'மகன்களால் ஏற்பட்ட அசுத்தங்களை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பணியை செய்ய வேண்டியுள்ளது.
எனவே, குடிமகன்களின் மதுக்கூடமாக மாறியுள்ள கந்தன் பூங்கா வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு என, தனியாக சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.