/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சுடுகாட்டுக்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
/
சுடுகாட்டுக்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
ADDED : அக் 05, 2025 12:55 AM

உத்திரமேரூர்:ஆர்.என்., கண்டிகை சுடுகாட்டுக்கு, சுற்றுச் சுவர் அமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்திரமேரூர் ஒன்றியம், ராவத்தநல்லூர் ஊராட்சியில் உள்ள ஆர்.என்., கண்டிகையில், 1,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள, களியாம்பூண்டி செல்லும் சாலையோரத்தில் சுடுகாடு உள்ளது.
இந்த சுடுகாட்டிற்கு முன்பக்கத்தில் சுற்றுச்சுவர் இல்லாமல் திறந்த நிலையிலே உள்ளது. இதனால், ராவத்தநல்லுாரில் இருந்து, களியாம்பூண்டிக்கு தினமும் பள்ளிக்கு செல்லும் மாணவ -- மாணவியர் அச்சத்தோடு சென்று வருகின்றனர்.
அதேபோல, இரவு நேரங்களில் மேல்பாக்கம், களியாம்பூண்டி ஆகிய பகுதிகளுக்கு, அவ்வழியே நடந்து செல்லும் பெண்களும் ஒருவித அச்சத்தோடு கடந்து செல்கின்றனர்.
எனவே, ஆர்.என்., கண்டிகை சுடுகாட்டிற்கு முன்பக்கத்தில் சுற்றுச்சுவர் அமைக்க, ஊரக வளர்ச்சி துறையினர் நடவடிக்கை எடுக்க, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.