/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மழைநீர் கால்வாய் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை
/
மழைநீர் கால்வாய் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை
ADDED : ஜூன் 30, 2025 12:48 AM

சிறுவாக்கம்:சிறுவாக்கத்தில், மழைநீர் கால்வாய் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் அடுத்த, சிறுவாக்கம் - வரதாபுரம் - சாமந்திபுரம் இடையே கிராமப்புறச் சாலை செல்கிறது. இந்த சாலை, பிரதமர் சாலைகள் மேம்பாட்டு நிதியில், 2.36 கோடி ரூபாய் செலவில் புதிய தார் சாலை போடும் பணி நடந்து வருகிறது.
சிறுவாக்கம் கிராமத்தில் தேங்கி நிற்கும் மழைநீரை, கம்பன் கால்வாயில் வெளியேற்றுவதற்கு, 1.5 கி.மீ., துாரத்திற்கு மழைநீர் கால்வாய் போடப்பட்டுள்ளது. இதில், 500 மீட்டர் துாரத்திற்கு கால்வாய் போடாமல் உள்ளது.
மேலும், இந்த கால்வாய் மீது கான்கிரீட் தடுப்பு இல்லாததால், அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, சிறுவாக்கம் - கம்பன் கால்வாய் குறுக்கே, அரைகுறையாக விடப்பட்ட மழைநீர் கால்வாய் கட்டித் தரும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.