/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தண்டலம் கூட்டுசாலை சந்திப்பில் மேம்பாலம் அமைக்க கோரிக்கை
/
தண்டலம் கூட்டுசாலை சந்திப்பில் மேம்பாலம் அமைக்க கோரிக்கை
தண்டலம் கூட்டுசாலை சந்திப்பில் மேம்பாலம் அமைக்க கோரிக்கை
தண்டலம் கூட்டுசாலை சந்திப்பில் மேம்பாலம் அமைக்க கோரிக்கை
ADDED : ஆக 13, 2025 01:54 AM

தண்டலம்: தண்டலம் கூட்டுசாலை சந்திப்பில் விபத்தை தடுக்க மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இருங்காட்டுக்கோட்டை அருகே, சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையும், பேரம்பாக்கம் - -தண்டலம் நெடுஞ்சாலையும் இணையும் தண்டலம் கூட்டுசாலை சந்திப்பு உள்ளது.
இங்கு போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த சிக்னல், போக்குவரத்து போலீசர் பணியில் இருப்பதில்லை.
இதனால், இரண்டு சாலைகளில் இருந்து செல்லும் வாகன ஓட்டிகள் தங்கள் இஷ்டம் போல சாலையின் குறுக்கே கடந்து செல்கின்றனர். இதனால், இந்த பகுதியில் அடிக்கடி விபத்தும், நெரிசலும் ஏற்படுகிறது.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
தொழிற்சாலைகள் அதிகரிப்பால் இந்த வழியே ஏராளமான கனரக வாகனங்கள் செல்கின்றன. சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், விபத்தை தடுக்க மாம்பாக்கம், சுங்குவார்சத்திரம், சந்தவேலுார் ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதேபோல, தண்டலம் கூட்டுசாலையில் விபத்தை தடுக்க மேம்பாலம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

