வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட கோரிக்கை
வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட கோரிக்கை
ADDED : ஜன 12, 2026 04:17 AM
அ நிறம் | அளவு
உத்திரமேரூர்: சாத்தணஞ்சேரியில் கிராம நிர்வாக அலுவலக கட்டடம் பழுதடைந்து பயன்பாடு இல்லாததால் புதிய கட்டடம் கட்ட பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது சாத்தணஞ்சேரி கிராமம். இக்கிராமத்தில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன் கட்டிய கட்டடத்தில் கிராம நிர்வாக அலுவலகம் இயங்கி வந்தது.
அக்கட்டடம் பழுதடைந்ததை அடுத்து பயன்பாடில்லாமல் கைவிடப்பட்டது.
அப்பகுதியில் உள்ள பழைய ஊராட்சி அலுவலக கட்டடத்தில் கிராம நிர்வாக அலுவலக பணி மேற்கொள்ளப்படுகிறது.
எனினும், அக்கட்டடமும் பழுதடைந்துள்ளதால், மழைக்காலத்தில் ஒழுகும் நிலை உள்ளது.
எனவே, சாத்தணஞ்சேரியில் வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கென புதிய கட்டடம் கட்ட சம்பந்தப் பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
