தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ திருப்போரூர் கூட்டுச்சாலையில் ரவுண்டானா அமைக்க கோரிக்கை

திருப்போரூர் கூட்டுச்சாலையில் ரவுண்டானா அமைக்க கோரிக்கை

திருப்போரூர் கூட்டுச்சாலையில் ரவுண்டானா அமைக்க கோரிக்கை


UPDATED : மே 11, 2026 04:26 PM

ADDED : மே 11, 2026 04:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 11, 2026 04:26 PM ADDED : மே 11, 2026 04:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

செங்கல்பட்டு;திருப்போரூர் கூட்டுச் சாலையில் ரவுண்டானா அமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

செங்கல்பட்டு அடுத்த வல்லம் ஊராட்சியில் திருக்கழுக்குன்றம் - செங்கல்பட்டு, திருப்போரூர் -- செங்கல்பட்டு சாலைகளை இணைக்கும் கூட்டுச்சாலை உள்ளது. இப்பகுதியில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து சென்று வருகின்றன. இந்த சாலையின் இருபுறமும் பழமையான இரண்டு ஆலமரங்கள் உள்ளன. சாலை விரிவாக்க பணிகளின் போது, இந்த ஆலமரங்களை வெட்டி அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் முயன்றனர். அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, இரு ஆண்டுகளுக்கு முன் வழக்கு தொடுத்தனர். இதை விசாரித்த நீதிமன்றம் ஆலமரங்களை அகற்ற தடை விதித்தது.

தற்போது இந்த மரங்களை சுற்றியும், அருகில் உள்ள சாலையோரமும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது.

இதனால் இந்த பகுதியில் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி தவிக்கின்றனர்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:

மேற்கண்ட பகுதியில் ரவுண்டானா இல்லாததால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கட்டுப்பாடுமின்றி சாலையை கடந்து செல்லும் போது விபத்துகள் ஏற்படுகிறது. சாலையை ஆக்கிரமித்து பல்வேறு வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், கடந்தாண்டு அரசு பேருந்து ஒன்று கடைக்குள் புகுந்து விபத்து ஏற்பட்டது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இந்த பகுதியில் ஏற்பட்ட விபத்துக்களில் தாத்தா - பேரன் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

எனவே இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ரவுண்டானா அமைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உயிரிழப்புகளை தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us