/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தார் சாலையோரம் பள்ளம் தடுப்பு அமைக்க கோரிக்கை
/
தார் சாலையோரம் பள்ளம் தடுப்பு அமைக்க கோரிக்கை
ADDED : நவ 03, 2025 12:57 AM

கோவிந்தவாடி: தார் சாலையோரம் தடுப்பு இல்லாததால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில், கோவிந்தவாடி பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த நிறுத்தத்தின் வழியாக, 2 கி.மீ., துாரத்திற்கு, நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில், கோவிந்தவாடி கிராமப்புற சாலை உள்ளது.
இந்த சாலையை, கடந்த ஆண்டு புதிய தார் சாலையாக செப்பணிட்டனர். வேகத்தடைகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
இதன் அருகே, சாலையோரம் ஆபத்தாக வயல்வெளி பள்ளம் உள்ளது.இதனால், கோவிந்தவாடி கிராம பேருந்து நிறுத்தம் வழியாக வாகனங்கள் செல்லும் போது நிலை தடுமாறி வயலில் கவிழும் நிலை உள்ளது.
எனவே, சாலையோரம் தடுப்பு அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தார் சாலை போடும் போது, தடுப்பு அமைக்க வேண்டும் என, அறிவுரை வழங்கினோம். நிதி கிடைக்காததால், தடுப்பு அமைக்கவில்லை. வரும் நிதி ஆண்டில் நிதி ஒதுக்கி, தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

