/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சந்து தெருவிற்கு சாலை வசதி அமைக்க கோரிக்கை
/
சந்து தெருவிற்கு சாலை வசதி அமைக்க கோரிக்கை
ADDED : ஜூலை 23, 2025 12:46 AM

அய்யங்கார்குளம்:அய்யங்கார்குளம் ஊராட்சியில், கீழாண்டை தெருவையும், நடுத்தெருவையும் இணைக்கும் சந்து தெருவிற்கு சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் ஒன்றியம், அய்யங்கார்குளம் ஊராட்சியில் உள்ள கீழாண்டை தெருவையும், நடுத்தெருவையும் இணைக்கும் வகையில் சந்து தெரு உள்ளது. நடுத் தெருவில் வசிப்பவர்கள், கீழாண்டை தெருவில் உள்ள அங்கன்வாடி மையம், சுகாதார நிலையம், அஞ்சலகம், துவக்கப் பள்ளிக்கு செல்வோர் சந்து தெரு வழியாக சென்று வருகின்றனர்.
பாதசாரிகள் சென்று வரும் இத்தெரு மண் சாலையாக இருப்பததால், செடி, கொடிகள் வளர்ந்துள்ளன.
மேலும், திறந்தவெளி கான்கிரீட் மழைநீர் கால்வாய் இருப்பதால், சந்து தெருவில் நடந்து செல்வோர் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே, சந்து தெருவில் கான்கிரீட் சாலை அமைப்பதோடு, கால்வாய்க்கு கான்கிரீட் தளம் அமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.