/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
லிங்காபுரம் சாலையோர பகுதியில் தடுப்பு ஏற்படுத்த கோரிக்கை
/
லிங்காபுரம் சாலையோர பகுதியில் தடுப்பு ஏற்படுத்த கோரிக்கை
லிங்காபுரம் சாலையோர பகுதியில் தடுப்பு ஏற்படுத்த கோரிக்கை
லிங்காபுரம் சாலையோர பகுதியில் தடுப்பு ஏற்படுத்த கோரிக்கை
ADDED : அக் 31, 2025 11:37 PM

வாலாஜாபாத்: லிங்காபுரம் சாலையில், விவசாய நிலங்களையொட்டி உள்ள தாழ்வான பகுதியில் தடுப்பு ஏற்படுத்த, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாலாஜாபாத் - செங்கல்பட்டு சாலையில், சங்கராபுரத்தில் இருந்து, லிங்காபுரம் வழியாக, தேவரியம்பாக்கம் செல்லும் சாலை உள்ளது.
சங்கராபுரம் சுற்று வட்டார பகுதி மக்கள் இச்சாலையை பயன்படுத்தி, வாலாஜாபாத், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இச்சாலையில் சங்கராபுரம் அடுத்த லிங்காபுரத்தில் இருந்து, தேவரியம்பாக்கம் வரையிலான 2 கி.மீ., சாலை உள்ளது. இச்சாலையின் இருபுறமும் விவசாய நிலங்கள் உள்ளன.
அப்பகுதியில் சாலை மேடாகவும், சாலை ஒட்டிய விவசாய நிலங்கள் மிகவும் தாழ்வானதாகவும் உள்ளன. மேலும் அப்பகுதியில், சாலை குறுகியதாகவும் அபாயகரமான வளைவும் கொண்டுள்ளதால், வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.
குறிப்பாக இரவு நேரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
எனவே, இச்சாலையோரத்தில், விவசாய நிலங்கள் உள்ள தாழ்வான பகுதியில் தடுப்புகள் ஏற்படுத்தி விபத்து அபாயத்தை தவிர்க்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

