/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காவணிப்பாக்கம் காப்பு காட்டில் தண்ணீர் தொட்டி ஏற்படுத்த கோரிக்கை
/
காவணிப்பாக்கம் காப்பு காட்டில் தண்ணீர் தொட்டி ஏற்படுத்த கோரிக்கை
காவணிப்பாக்கம் காப்பு காட்டில் தண்ணீர் தொட்டி ஏற்படுத்த கோரிக்கை
காவணிப்பாக்கம் காப்பு காட்டில் தண்ணீர் தொட்டி ஏற்படுத்த கோரிக்கை
ADDED : மார் 25, 2025 08:01 AM
காவணிப்பாக்கம் : உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூர் ஊராட்சிக்கு உட்பட்டது காவணிப்பாக்கம் கிராமம். இந்த கிராமத்தில், வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடு உள்ளது.
காவணிப்பாக்கத்தில் துவங்கி, பட்டா மற்றும் பேரணக்காவூர் கிராம எல்லை வரையிலான பல ஏக்கர் பரப்பில் இந்த காப்புக்காடு அமைந்துள்ளது. இக்காட்டு பகுதியில், மான், முயல், குரங்கு, நரி, முள்ளம்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் வசிக்கின்றன.
மேலும், மயில் உட்பட ஏராளமான பறவை வகைகளுக்குமான வாழ்விடமாகவும் இக்காடு உள்ளது. இக்காட்டு பகுதியில், ஆண்டுதோறும் கோடைக்காலத்தின் போது கடுமையான வறட்சி நிலவுகிறது.
அச்சமயம் வெப்பதாக்கத்தால் காட்டில் உள்ள வனவிலங்குகள்மற்றும் பறவைகளும் தாகம் போக்க அருகாமையில் உள்ள விவசாய நிலங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை தேடி அலைகின்றன. அச்சமயங்களில், பறவைகளும், விலங்குகளும் வேட்டையாடப்படும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
இதனால், காவணிப்பாக்கம் காப்புக் காட்டு பகுதியில், கோடைக்காலத்தில் தண்ணீர் வசதி ஏற்படுத்த வழிவகை செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.