/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாநகர பஸ்களை காஞ்சி வரையில் நீட்டிக்க கோரிக்கை
/
மாநகர பஸ்களை காஞ்சி வரையில் நீட்டிக்க கோரிக்கை
ADDED : ஏப் 25, 2025 10:09 PM
காஞ்சிபுரம்:சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தில், 500க்கும் மேற்பட்ட தாழ்தள சொகுசு பேருந்து, சாதாரணப் பேருந்து உள்ளிட்ட பல்வேறு விதமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னை புறநகரை ஒட்டியுள்ள ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம், தாம்பரம், படப்பை, வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதில், சுங்குவார்சத்திரம் வரையில் இயக்கப்படும் அரசு பேருந்துகளை, காஞ்சிபுரம் வரையில் நீட்டிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பயணியர் சிலர் கூறியதாவது:
காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு செல்வதற்கு, குறைந்த மற்றும் மாதாந்திர கட்டணத்தில் மின்சார ரயில்களில் மூன்று மணி நேரம் பயணிக்க வேண்டி உள்ளது.
சுங்குவார்த்திரம் வரையில் இயக்கப்படும் மாநகர பேருந்துகளை, காஞ்சிபுரம் வரையில் நீடித்தால் சென்னையில் பணிபுரியும் பெரும்பாலான மக்களின் பயணம் நேரம் வெகுவாக குறையும்.
இவ்வாறு அவர் கூறினர்.