/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி கைலாசநாதர் கோவிலில் 'டிஜிட்டல்' திரை அமைக்க கோரிக்கை
/
காஞ்சி கைலாசநாதர் கோவிலில் 'டிஜிட்டல்' திரை அமைக்க கோரிக்கை
காஞ்சி கைலாசநாதர் கோவிலில் 'டிஜிட்டல்' திரை அமைக்க கோரிக்கை
காஞ்சி கைலாசநாதர் கோவிலில் 'டிஜிட்டல்' திரை அமைக்க கோரிக்கை
ADDED : நவ 23, 2024 11:33 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் வெளியூர், வெளிநாட்டு சுற்றுலாப் பயணியரின் முதல் தேர்வாக, காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலாக உள்ளது.
இக்கோவில், கி.பி.,7ம் நுாற்றாண்டில், ராஜசிம்மன் என்ற பல்லவ மன்னரால் கட்டப்பட்டது என கூறப்படுகிறது. இக்கோவில் மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இதன் காரணமாகவே, இக்கோவிலுக்கு பல ஆயிரம் பேர் அன்றாடம் வந்து செல்கின்றனர். இக்கோவில் வரலாறு, சிறப்பு, கட்டட கலை போன்றவை சுற்றுலாப் பயணியர் தெரிந்து கொள்ள தகவல் பலகை, மொழி பெயர்ப்பாளர் போன்ற வசதிகள் இக்கோவிலில் இல்லை.
இதனால், ஒளியும், ஒலியும் காட்சி அமைப்பு வசதியை, மத்திய தொல்லியல் துறை அல்லது தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகம் ஆகிய துறையினர் மேற்கொள்ள வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அதாவது, டிஜிட்டல் முறையில் திரை அமைத்து, அதில் கோவில் பற்றி விளக்கி கூறும் வகையில், ஒளியும், ஒலியும் காட்சி அமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கின்றனர்.
இக்கோவில் சிறப்பு, கட்டட கலை, வரலாறு போன்றவை முக்கிய மொழிகளில் இடம் பெற செய்ய வேண்டும் என்கின்றனர்.
இதனால், வெளியூர், வெளி மாநிலம், வெளிநாடு சுற்றுலாப் பயணியருக்கு, கோவில் பற்றி தெரிந்து கொள்ள முடியும் என்கின்றனர்.

