/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பழையசீவரம் நரசிம்மர் குளம் துார்வாரி பராமரிக்க கோரிக்கை
/
பழையசீவரம் நரசிம்மர் குளம் துார்வாரி பராமரிக்க கோரிக்கை
பழையசீவரம் நரசிம்மர் குளம் துார்வாரி பராமரிக்க கோரிக்கை
பழையசீவரம் நரசிம்மர் குளம் துார்வாரி பராமரிக்க கோரிக்கை
ADDED : மே 17, 2025 01:47 AM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், பழையசீவரம் கிராமத்தில் பத்மகிரி என்ற மலையில் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் அமைந்துள்ளது.
ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த கோவிலுக்கு, காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து வழிபட்டு வருகின்றனர்.
இக்கோவில் அமைந்துள்ள மலையடிவாரத்தில் கோவிலுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் பரப்பிலான குளம் அமைந்துள்ளது.
லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த குளத்தில் கை, கால் சுத்தம் செய்தல் மற்றும் புனித நீராடுதலுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும், அருகாமையில் உள்ள கங்கையம்மன் கோவில் விழா காலங்களிலும், பெருமாள் கோவில் விசேஷங்களின் போதும் இந்த குளத்து நீரை கொண்டு பூஜை செய்தல் உள்ளிட்டவைகளுக்கு பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில், பல ஆண்டுகளாக இக்குளம் துார்வாரததால் தற்போது துார்ந்து காணப்படுகிறது.
இதனால், மழைக்காலங்களில் இக்குளத்தில் போதுமான தண்ணீர் சேகரமாகாமல் கோடைக்காலத்தில் விரைவாக வறண்டு போகிறது.
எனவே, லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலுக்கு சொந்தமான இக்குளத்தை துார்வாரி, குளத்திற்கான வரத்து கால்வாய் பகுதிகளையும் பராமரிக்க வேண்டும் என, பக்தர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.