/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
d/c திருப்பதிக்கு ஏ.சி., பஸ் இயக்க கோரிக்கை
/
d/c திருப்பதிக்கு ஏ.சி., பஸ் இயக்க கோரிக்கை
ADDED : ஆக 07, 2025 12:20 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் இருந்து, அரக்கோணம் வழியாக திருப்பதிக்கு குளிர் சாதனப் பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில், காஞ்சிபுரம் மண்டலத்தின் கீழ் நுாற்றுக்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், காஞ்சிபுரம் - அரக்கோணம் வழியாக திருப்பதி வரையில், அரசு விரைவு பேருந்துகள் மற்றும் இடை நில்லாத பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
காஞ்சிபுரத்தில் இருந்து, திருப்பதிக்கு மூன்று மணி நேரம் பயணம் செய்ய வேண்டி இருப்பதால், பயணியர் நீண்ட துாரம் அமர்ந்து செல்ல வேண்டி இருக்கிறது.
இதனால், பயண களைப்பு மற்றும் வெயில் வெட்கையில் செல்ல வேண்டி உள்ளது என, பயணியர் புலம்ப வேண்டி உள்ளது.
இதை தவிர்க்க காஞ்சிபுரத்தில் இருந்து, அரக்கோணம் வழியாக திருப்பதி வரையில் குளிர்சான பேருந்துகள் இயக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.