/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வேகத்தடை, எச்சரிக்கை பலகை பள்ளி அருகே வைக்க கோரிக்கை
/
வேகத்தடை, எச்சரிக்கை பலகை பள்ளி அருகே வைக்க கோரிக்கை
வேகத்தடை, எச்சரிக்கை பலகை பள்ளி அருகே வைக்க கோரிக்கை
வேகத்தடை, எச்சரிக்கை பலகை பள்ளி அருகே வைக்க கோரிக்கை
ADDED : டிச 04, 2025 04:26 AM

காஞ்சிபுரம்: செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - திருத்தணி வரையில், 85 கி.மீ., இருவழி சாலை உள்ளது. இந்த இருவழி சாலை, சென்னை - கன்னியாகுமரி சாலை விரிவாக்க திட்டத்தில், நான்குவழி சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.
முதலில், செங்கல்பட்டு - காஞ்சிபுரம் வரையில், 41 கி.மீ., துாரத்திற்கு, 448 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.
அதேபோல, காஞ்சிபுரம் - அரக்கோணம் - திருத்தணி வரையில், 44 கி.மீ., துாரத்திற்கு, 350 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, 80 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
சாலை பணிகள் நிறைவு பெற்றிருப்பதால், காஞ்சிபுரம் - அரக்கோணம் மார்க்கம் மற்றும் அரக்கோணம் - காஞ்சிபுரம் ஆகிய மார்க்கங்களாக செல்லும் வாகனங்கள் அசுர வேகத்தில் செல்கின்றன.
இதனால், காஞ்சிபுரம் மாவட்டம், படுநெல்லி ஊராட்சி துவக்கப் பள்ளி, ராணிப்பேட்டை மாவட்டம் பள்ளூர் துவக்கப் பள்ளி, பரமேஸ்வரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளிகள் அருகே வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என, மாணவர்களின் பெற்றோர் தெரிவித்தனர்.
எனவே, பள்ளிகள் அருகே வேகத்தடை மற்றும் எச்சரிக்கை பலகைகள் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.

