/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அரிசி ஆலையால் பரவும் துாசு சாம்பலை தடுக்க கோரிக்கை
/
அரிசி ஆலையால் பரவும் துாசு சாம்பலை தடுக்க கோரிக்கை
அரிசி ஆலையால் பரவும் துாசு சாம்பலை தடுக்க கோரிக்கை
அரிசி ஆலையால் பரவும் துாசு சாம்பலை தடுக்க கோரிக்கை
ADDED : ஜன 07, 2025 06:54 AM
வாலாஜாபாத், : வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது ஒட்டிவாக்கம் கிராமம். காஞ்சிபுரம் - வாலாஜாபாத் சாலையில் உள்ள இப்பகுதியில், அடுத்தடுத்து இரு இடங்களில், தனியாருக்கு சொந்தமான அரிசி ஆலைகள் இயங்குகின்றன.
இந்த ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் உமி மற்றும் சாம்பல் உள்ளிட்ட கழிவுகள், அப்பகுதியைச் சுற்றியுள்ள குடியிருப்புகளில் பரவுகிறது. இதனால், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் குடிநீர் உள்ளிட்டவற்றில் சாம்பல் படிந்து, பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதாக புகார் எழும்பியுள்ளது.
இதுகுறித்து, ஒட்டிவாக்கம் பகுதிவாசிகள் கூறியதாவது:
ஒட்டிவாக்கம் சாலை யோரங்களில் இயங்கும் அரிசி ஆலைகளில் இருந்து, உமி மற்றும் கருப்பு நிறத்திலான சாம்பல் போன்றவை திறந்தவெளியில் தினசரி வெளியேற்றப்படுகிறது. அவை, சாலை மற்றும் வீடுகளில் பரவி, சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
இதே பிரச்னை பல ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் இருந்தது. அப்போது, மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு மனு அளித்தோம். அதை தொடர்ந்து, பாதிப்புகள் இல்லாமல் இருந்தது. தற்போது, மீண்டும் இப்பிரச்னைதலைதுாக்கியுள்ளது.
எனவே, ஒட்டிவாக்கம் அரிசி ஆலைகளில் இருந்து உமி, சாம்பல் உள்ளிட்டவை பரவாமல் கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள்கூறினர்.

