/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பழையசீவரம் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த கோரிக்கை
/
பழையசீவரம் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த கோரிக்கை
பழையசீவரம் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த கோரிக்கை
பழையசீவரம் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த கோரிக்கை
ADDED : ஜூன் 01, 2025 12:15 AM
வாலாஜாபாத், செங்கல்பட்டு - காஞ்சிபுரம் ரயில் வழித் தடத்தில் பழையசீவரம் ரயில் நிலையம் உள்ளது. பழையசீவரம் மற்றும் சுற்றிவட்டாரத்தினர், இந்த ரயில் நிலையம் வந்து, அங்கிருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம், அரக்கோணம், திருமால்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ரயிலில் சென்று வருகின்றனர்.
பழையசீவரம் ரயில் நிலையத்தில், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணியர் கடும் அவதிபடுகின்றனர். இந்த வழி தடத்தில் இரட்டை பாதை வசதியும் இல்லாததால், எதிரே வரும் மற்றொரு ரயிலுக்காக மணிக்கணக்கில் பயணியர் காத்திருக்க வேண்டியுள்ளது.
ரயில் நிலைய நடைபாதை மீது நிழற்கூரை வசதி ஏற்படுத்தாததால், வெயில் மற்றும் மழையால் பயணியர் மிகவும் சிரமபடுகின்றனர்.
சென்னையில் இருந்து, தாம்பரம், செங்கல்பட்டு வழியாக திருமால்பூர் செல்லும் ரயிலில், இரவு நேரத்தில் பயணிப்போர் பழையசீவரம் நிலையத்தில் இறங்கி தங்கள் கிராமங்களுக்கு செல்கின்றனர்.
பழையசீவரம் ரயில் நிலையத்தை விட்டு வெளியே செல்லும் வழிப்பாதையில் மின்விளக்குகள் இல்லாததால், இரவு நேரத்தில் முதியவர்கள், பெண்கள் மற்றும் பயணியர் அவ்வழியாக அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே, பழையசீவரம் ரயில் நிலையத்தில் குடிநீர், கழிப்பறை, நிழற்கூரை மற்றும் மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அமைத்து தர, ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் உள்ளிட்ட பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.