/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நீரில் மூழ்கிய நெற்பயிருக்கு ரூ.30,000 வழங்க கோரிக்கை
/
நீரில் மூழ்கிய நெற்பயிருக்கு ரூ.30,000 வழங்க கோரிக்கை
நீரில் மூழ்கிய நெற்பயிருக்கு ரூ.30,000 வழங்க கோரிக்கை
நீரில் மூழ்கிய நெற்பயிருக்கு ரூ.30,000 வழங்க கோரிக்கை
ADDED : டிச 03, 2024 05:02 AM
காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் காரணமாக, வீடுகள் சேதமடைந்தும், கால்நடைகள் இறப்பும், பயிர் சேதமும் ஏற்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனால், பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலர் நேரு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையடுத்து, கலெக்டருக்கு அவர் விடுத்துள்ள கோரிக்கையின்படி, 'மனித உயிரிழப்புக்கு 10 லட்சம் ரூபாயும், இடிந்த வீடுகளுக்கு 50,000 ரூபாயும், மாடு ஒன்றுக்கு 50,000 ரூபாயும், ஆடு ஒன்றுக்கு 10,000 ரூபாயும், நீரில் மூழ்கி நாசமான நெற்பயிர் ஏக்கருக்கு 30,000 ரூபாயும் வழங்க வேண்டும்' என்றார்.