/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாலாஜாபாத் பி.டி.ஓ., அலுவலகத்தில் இருக்கை வசதி ஏற்படுத்த கோரிக்கை
/
வாலாஜாபாத் பி.டி.ஓ., அலுவலகத்தில் இருக்கை வசதி ஏற்படுத்த கோரிக்கை
வாலாஜாபாத் பி.டி.ஓ., அலுவலகத்தில் இருக்கை வசதி ஏற்படுத்த கோரிக்கை
வாலாஜாபாத் பி.டி.ஓ., அலுவலகத்தில் இருக்கை வசதி ஏற்படுத்த கோரிக்கை
ADDED : மே 24, 2025 11:06 PM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியத்தில், 63 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், சாலை, குடிநீர், மின்சாரம், சுகாதாரம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், அரசு திட்டங்களை பெறவும் உள்ளாட்சி பிரதிநிதி மற்றும் பொதுமக்கள் தினசரி வந்து செல்கின்றனர்.
வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வருவோர், தங்களுக்கான பணி முடியும் நேரம் வரை காத்துள்ளனர்.
அவ்வாறு காத்திருக்கும் பொது மக்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேவையான இருக்கை வசதியில்லாமல் அவதிப்படுகின்றனர். அலுவலகத்தின் வெளியே வளாகத்தில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது
எனவே, வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வருபவர்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.