/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உள்ளாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலை புனரமைக்க கோரிக்கை
/
உள்ளாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலை புனரமைக்க கோரிக்கை
உள்ளாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலை புனரமைக்க கோரிக்கை
உள்ளாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலை புனரமைக்க கோரிக்கை
ADDED : மே 18, 2025 01:54 AM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது உள்ளாவூர் கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில், ஒருகால பூஜை தொடர்ந்து நடைபெறுகிறது.
விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் வழங்குதல் நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில், பராமரிப்பின்மை காரணமாக, பல ஆண்டுகளுக்கு முன், இக்கோவில் மண்டபத்தின் முன் பகுதி கட்டடம் இடிந்தது. அக்கட்டட கருங்கற்கள் தற்போது அங்கும், இங்குமாக சிதறிய நிலையில் உள்ளது.
தற்போது இக்கோவில் கட்டடம் பழுதடைந்து நாளுக்கு நாள் பலவீனமாகி வருகிறது. கோவிலின் கோபுர பகுதியை சுற்றி உள்ள சுவாமி உருவ படங்கள் சிதிலம் அடைந்து, கான்கிரீட் பெயர்ந்து உள்ளது.
மண்டபத்திற்குள் மழைநீர் சொட்டுவதோடு, மண்டபம் மற்றும் கோபுரம் மீது செடி, கொடிகள் வளர்ந்து உள்ளன.
எனவே, பழமை வாய்ந்த இக்கோவிலை தொன்மை மாறாமல் புனரமைத்து வழிபாட்டிற்கு விட, ஹந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் மற்றும் அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.