/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குளத்தில் கொட்டப்படும் குப்பை அகற்றி சீரமைக்க கோரிக்கை
/
குளத்தில் கொட்டப்படும் குப்பை அகற்றி சீரமைக்க கோரிக்கை
குளத்தில் கொட்டப்படும் குப்பை அகற்றி சீரமைக்க கோரிக்கை
குளத்தில் கொட்டப்படும் குப்பை அகற்றி சீரமைக்க கோரிக்கை
ADDED : மே 17, 2025 01:39 AM

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே உள்ள பொன்னேரி அம்மன் கோவில் எதிரில், வெள்ளகுளம் உள்ளது.
பழமையான இக்குளம் அப்பகுதி நிலத்தடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இக்குளத்து நீரை கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் அப்பகுதிவாசிகள் வீட்டு உபயோக தேவைக்கு பயன்படுத்தி வந்தனர். முறையான பராமரிப்பு இல்லாததால், அப்பகுதியினர் குளத்தை குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும், வீட்டு உபயோக கழிவுநீரை குளத்தில் விடுவதால், குளத்து நீர் மாசடைந்து உள்ளது.
குளத்தை சீரமைத்து குளக்கரையை சுற்றிலும் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக வேண்டும் என, பகுதிவாசிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.