/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கால்வாய் துார்வாரிய கழிவு அகற்ற கோரிக்கை
/
கால்வாய் துார்வாரிய கழிவு அகற்ற கோரிக்கை
ADDED : டிச 04, 2024 12:23 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நகரில் பெய்யும் மழை நீர் வெளியேறும் வகையில், மன்னர்கள் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட, மஞ்சள் நீர் கால்வாய், புத்தேரி பகுதியில் துவங்கி, கிருஷ்ணன் தெரு, பல்லவர்மேடு, காமராஜர் வீதி, ரயில்வே சாலை, ஆனந்தாபேட்டை, திருக்காலிமேடு வழியாக நத்தப்பேட்டை ஏரியில் இணைகிறது.
இக்கால்வாய்க்கு 40 கோடி ரூபாய் செலவில் புதிதாக பக்கவாட்டு சுவர் அமைக்கும் பணி துவக்கப்பட்டு பணி நடந்து வருகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழையையொட்டி கால்வாய் துார்வாரப்பட்டது. இதில், திருக்காலிமேடு அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் துார்வாரிய குப்பை செடி, கொடிகள் உள்ளிட்ட கழிவுகளை அப்புறப்படுத்தால், கால்வாய் கரையோரம் குவியலாக போடப்பட்டுள்ளது.
மீண்டும் மழை பெய்தால், குப்பை கழிவுகள் கால்வாயில் சரிந்து விழுந்து அடைப்பு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, திருக்காலிமேட்டில் மஞ்சள்நீர் கால்வாய் துார்வாரிய கழிவுகளை முழுமையாக அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.