/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
/
நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
ADDED : ஜூன் 29, 2025 12:22 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, திருப்புட்குழி மதுரா பாலுசெட்டிசத்திரம், அண்ணா சாலையில் போக்குவரத்துக்கும், பாதசாரிகளுக்கும் இடையூறாக உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் - வேலுார் சாலையில், திருப்புட்குழி மதுரா பாலுசெட்டிசத்திரம் உள்ளது. இங்குள்ள பிரதான சாலையான அண்ணா சாலையில், வங்கி, காய்கறி, பலசரக்கு, ஹோம் அப்ளையன்ஸ், உணவகம் என, பல்வேறு கடைகள் உள்ளன.
வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில் உள்ள கடைக்காரர்கள் தங்களது கடையை சாலையோர நடைபாதை பகுதியை ஆக்கிரமித்து விரிவாக்கம் செய்துள்ளனர்.
இதனால், சாலையின் அகலம் குறைந்துள்ளதால், நடைபாதை பகுதியில் நடந்து செல்ல வேண்டிய பாதசாரிகள், சாலையில் நடந்து செல்வதால் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
மேலும், அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இங்குள்ள கடைகளுக்கு சரக்கு ஏற்றி வரும், இலகு ரக சரக்கு வாகனங்கள் வந்த வழியே திருப்பி செல்வதற்குகூட வாகனத்தை திருப்புவதில் சிரமம் ஏற்படுகிறது.
எனவே, திருப்புட்குழி மதுரா பாலுசெட்டிசத்திரத்தில், அண்ணா சாலையில், வாகன போக்குவரத்திற்கும், பாதசாரிகளுக்கும் இடையூறாக உள்ள சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.