/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சேதமான வடிகால் 'மேன்ஹோல்' மூடியை சீரமைக்க வேண்டுகோள்
/
சேதமான வடிகால் 'மேன்ஹோல்' மூடியை சீரமைக்க வேண்டுகோள்
சேதமான வடிகால் 'மேன்ஹோல்' மூடியை சீரமைக்க வேண்டுகோள்
சேதமான வடிகால் 'மேன்ஹோல்' மூடியை சீரமைக்க வேண்டுகோள்
ADDED : டிச 22, 2024 12:13 AM

ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியம், சென்னக்குப்பம் ஊராட்சி, ஒரகடம் சக்கரபாணி நாயுடு தெருவில் 20 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. தவிர, அரசு தொடக்கப்பள்ளிக்கு செல்லும் மாணவ -- மாணவியர், ஒரகடம் மின் வாரிய அலுவலகம், தனியார் வங்கிகளுக்கு செல்லும் ஏராளமானவேர் தினமும் இந்த சாலை வழியே சென்று வருகின்றனர்.
இங்கு, மழைநீர் மற்றும் குடியிருப்பு கழிவுநீர் வெளியேறும் வகையில் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடிகால் மேன்ஹோல் மூடி உடைந்து கால்வாயில் விழுந்துள்ளது.
இதனால், இந்த சாலை வழியே, பள்ளிக்கு நடந்து செல்லும் மாணவ - மாணவியர், 'மேன்ஹோலில்' விழுந்து விபத்து ஏற்படும் சூழல் அதிகரித்துள்ளது.
மேலும், கால்வாயில் உடைந்து விழுந்துள்ள சிமென்ட் மூடியால், மழைநீர் வடிய தடை ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மழைநீர் கால்வாயில் சேதமடைந்து உள்ள மேன்ஹோல் மூடியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்கின்றனர்.