/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சேதமடைந்த சாலை சீரமைக்க கோரிக்கை
/
சேதமடைந்த சாலை சீரமைக்க கோரிக்கை
ADDED : மே 24, 2025 11:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் விளக்கடி தோப்பு தெரு வழியாக அழகிய சிங்க பெருமாள் கோவில், நாராயணபாளையம் தெரு, ஆலடி விநாயகர் கோவில் தெரு, விளக்கடி கோவில் தெரு உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் சென்று வருகின்றனர்.
வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், சாலையின் ஒரு பகுதி சேதமடைந்து உள்ளது. சாலையின் உடைந்த பகுதியை முழுமையாக சீரமைக்காமல் சிமென்ட் சிலாப் வாயிலாக மூடப்பட்டுள்ளது.
இதனால், இரவு நேரத்தில் இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. எனவே, சேதமடைந்த சாலையை முறையாக சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.