/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தட்டாம்பூண்டி சாலையை சீரமைக்க கோரிக்கை
/
தட்டாம்பூண்டி சாலையை சீரமைக்க கோரிக்கை
ADDED : ஜூன் 12, 2025 02:12 AM

உத்திரமேரூர்:தட்டாம்பூண்டியில் சாலை சேதமடைந்து உள்ளதால், வாகன ஓட்டிகள் சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்திரமேரூர் தாலுகா, நாஞ்சிபுரம் -- கட்டியாம்பந்தல் சாலையில் இருந்து பிரிந்து, தட்டாம்பூண்டி செல்லும் சாலை உள்ளது.
இந்த சாலையை பயன்படுத்தி அப்பகுதியினர், உத்திரமேரூர், மதுராந்தகம், செங்கல்பட்டு ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
கடந்த 30 ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்ட இச்சாலை, சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும், மழை நேரங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்குவதால், வாகன ஓட்டிகள் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, சேதமடைந்துள்ள தட்டாம்பூண்டி சாலையை சீரமைக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.