/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குப்பையால் துார்ந்த வடிகால் துார்வாரி சீரமைக்க கோரிக்கை
/
குப்பையால் துார்ந்த வடிகால் துார்வாரி சீரமைக்க கோரிக்கை
குப்பையால் துார்ந்த வடிகால் துார்வாரி சீரமைக்க கோரிக்கை
குப்பையால் துார்ந்த வடிகால் துார்வாரி சீரமைக்க கோரிக்கை
ADDED : ஜூன் 26, 2025 11:33 PM

ஸ்ரீபெரும்புதுார்:மண்ணுாரில் குப்பையால் துார்ந்த வடிகாலை துார்வாரி சீரமைக்க வேண்டுமென, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்குட்பட்ட மண்ணுார் ஊராட்சி, அம்பேத்கர் தெருவில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில், மழைநீர் மற்றும் வீட்டு உபயோக கழிவுநீர் வெளியேறும் வகையில் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.
ஊராட்சி நிர்வாகம் முறையாக துார்வாரி பராமரிக்காததால், வடிகால் முழுதும், பிளாஸ்டிக் குப்பை குவிந்து உள்ளது. இதனால், அடைப்பு ஏற்பட்டு, வடிகாலில் கழிவுநீர் தேங்கி உள்ளது.
அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுவதோடு, கழிவுநீரில் கொசு உற்பத்தி அதிகரித்து, அப்பகுதி மக்கள் கொசுக்கடி தொல்லையால் அவதி அடைந்து வருகின்றனர்.
மேலும், மழை காலங்களில் மழைநீர் செல்ல வழியின்றி, வெள்ள நீர் வீடுகளில் புகுந்து, வெள்ள பாதிப்பு ஏற்படும் அச்சத்தில் பகுதி மக்கள் உள்ளனர்.
எனவே, வடிகாலில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி, துார்வாரி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.